பாவ இருளில் வாழ்ந்த மனுக்குலத்தை மீட்க சிலுவையில் தன் உயிரை விலைக்கிரயமாக கொடுத்த அருள் நாதர் இயேசுவின் மரணமும் அவர் உயீர்த் உலகளாவிய திருச்சபை உருவாக்கத்திற்கு வித்தானது.
இயேசுவின் மரணத்திற்கு பின்பு அவரது அன்பை இந்தியாவிற்கு சுமந்து வந்த பன்னிரு சீஷர்களில் ஒருவரான புனித தோமா மூலமாக இந்தியாவில் குறிப்பாக தென்திருவிதாங்கூாில் சுவிக்ஷே விதைகள் விதைக்கப்பட்டது . 1806-ல் வில்லியம் ெதாபியாஸ் றிங்கல் தோபே ஐயர் அவர்கள் ஜெர்மனி தேசத்தைவிட்டு மிஷனெறியாக தென் திருவிதாங்கூரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவிசேஷ பணி புரிந்தார்.
றிங்கல் தோபே ஐயர் தாயகம் திரும்பிய பின் 1819 - ஆம் ஆண்டு LMS மூலம் இங்கிலாந்து மிஷனறி சாா்லஸ் மீட் ஐயர் நெய்யூரை மையமாக கொண்டு ஊழியம் செய்து வந்தார்
தேவிகோடு என்னும் ஊா் கன்னயாகுமாி மாவட்டம் மிடாலம் கடற்கரையிலிருந்து 2.கி.மீ.க்குள் அமைந்துள்ளது 1900-களில் இவ்வூர் மக்கள் தங்கள் தேவைகளை சந்திக்க கருங்கல் மற்றும் இன்று மார்த்தாண்டம் என்று அழைக்கப்படுகிறதான தொடுவெட்டி போன்ற இடங்களுக்கு நடைபயணமாக சென்று வருவது வழக்கம். அக்காலத்தில் சாா்லஸ்மீட் ஐயர் நெய்யூரில் தங்கி கொத்தரைவிளையை மையமாகக் கொண்டு மிஷ்ெனாி ஊழியம் செய்துவந்தாா் அவருடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் உருவாக்கி சபைகளில் தேவிகோடு சபையும் ஒன்று ஆகும். தேவியோடு பிராந்தியத்தில் 1828 ம் காலங்களில் பனை ஓலைகளில் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டது. கூடவே ஒரு கல்வி நிறுவனமும் சபை உதவி புரிந்து தேவிகோடு மக்களின் அன்பை சம்பாதித்துக் கொண்டார். விரிவு படுத்தப்பட்ட தேவிகோடு ஆலயம் உருவாவதற்கு இவர்தான் காரண கர்த்தாவதற்கு இருந்தார் இவரது அயராத முயற்சியினால் பல்வேறு குடும்பங்ளின் ஒத்துழைப்புடன் வலுவான தேவகோடு திருச்சபை உருவானது.
ஐசக் ஹென்றி ஹாக்கருக்குப் பின்னால் மீண்டும் மூன்றாவது மிஷனரியாக ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து சிங்களேயர் ஐயர் 1929 -ம் ஆண்டு தேவிகோட்டிற்கு வந்து தேவனுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார். போக்குவத்து வசதிகள் போதுமான அளவில் இல்லாத அந்த காலத்தில் மிஷனரிகள் தங்கி ஊழியம் செய்வதற்கு மிஷன் வீடு ஒன்று இல்லாதிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் 1929 ம் ஆண்டில் சிங்களேயர் ஐயர் இறைப்பணியாற்றிய காலத்தில் மிஷன் வீடு கட்டப்பட்டது. மேலும் வாசிக்க ....