ஓய்வு நாள் பாடசாலை

நமது ஆலயத்தில் ஓய்வுநாள் பாடசாலையானது எல்லா ஞாயிற்றுகிழமையும் காலை ஆராதனைக்கு பிறகு 10.30 மணியளவில் 345 மாணவர்கள் 46 ஆசிரியர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓய்வுநாள் பாடசாலையின் முக்கிய நோக்கமானது சிறுப்பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் அவர்களை தடை செய்யாதிருங்கள் என்ற வேதவாக்கியத்தின் படி நமது பிள்ளைகளை கடவுளுக்குரிய பாதையில் வழிநடத்துவதாகும். நமது பிள்ளைகளின் தனித்திறமையை வளர்க்கும் விதமாக பாடல் போட்டி, பேச்சுப் போட்டி, ஓரங்கநாடகம், பிரசங்கப் போட்டி போன்ற பல போட்டிகளில் பங்கு பெற வைக்கின்றனர், வருடத்திற்கு ஒரு முறை நமது பிள்ளைகளுக்கு கேகர அளவில் றாலி போட்டிகள் மற்றும் பேராய அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை பெற்று நமது திருச்சபைக்கு பெருமை சேர்க்கிறார்கள். நமது பிள்ளைகள் விடுமுறை நாட்களை வீணடிக்காத படி கடவுளுக்குரிய காரியங்களில் இன்னும் பெலப்பட வி.பி.ஸ் நடத்தப்படுகிறது.