
அன்பர்களே,
அன்பர் இயேசு கிறிஸ்துவின் திருபெயரில் அன்பின் வாழ்த்துக்கள்,
நமது சபையின் பெண்கள் ஐக்கிய சங்கமானது சீரும், சிறப்புமாக செயல்பட்டு வருகின்றது, இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 3.30 மணியளவில் தொடங்கி 5 மணிவரை நடை பெறுகின்றது, நமது சபை போதகரின் துணைவியார் தலைமையில் செயலர் றோஸ்லெட் சேம், மற்றும், கணக்கர் ஜிங்கில் ராணி என்பவர்களின் பொறுப்பில் சுமார் 60 பெண்கள் கலந்து கொண்டு ஆண்டவராகிய இயேசுவின் இராஜ்ஜியத்தை கட்டி வருகின்றார்கள்.
இதர ஊழியங்கள்
ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு முறை நம் சேகரத்திற்கு கீழ் இருக்கின்ற ஒவ்வொரு திருச்சபை பெண்களையும் கூட்டி தேவனை மகிமைப்படுத்தி வருகின்றார்கள் நம்முடைய பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பாக மாதத்தின் இறுதி ஞாயிறு ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் உள்ள நம்முடைய திருச்சபை குடும்பங்களுக்கு கடந்து சென்று அவர்களுக்காக ஜெபித்து, வருகின்றார்கள், இந்த பெண்கள் ஐக்கிய சங்க வீடு சந்திப்பில் வருகின்ற காணிக்கைகளை , வருடம் தோறும் இரண்டு ஏழைகளுக்கு கொடுக்கின்றார்கள். மேலும் திருச்சபை வளர்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பதிலும் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றார்கள்.
நமது திருச்சபையின் பெண்கள் சங்கம் இன்னும் வளர இறைமகன் இயேசுவே நமக்கு கிருபை அருள்வாராக ஆமேன்.
நமது பெண்கள் சங்கத்தின் நோக்கம்
- திருச்சபை வளர்ச்சிக்காக
- திருச்சபையின் குடும்பங்களுக்காக
- தேசத்துக்காக
- மிஷ்னெறி பணிகளுக்காக
- பேராயம் மற்றும் பேராய ஊழியங்களுக்காக
- ஆத்துமா இரட்சிப்புக்காக
- வியாதியஸ்தர்களுக்காக
ஜெபிப்பதே நமது திருச்சபையின் பெண்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம்.