
அன்பானவர்களே ,
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள் என்ற சங்கீதக் காரனின் வேத வாக்குக்கிணங்க நமது சபையின் பாடகற்குழு சிறப்பாக ஆண்டவரை மகிமைப்படுத்தி வருகின்றது.
நமது சபையின் பாடகற்குழு பாடல் பயிற்சி எல்லா வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்று வருகின்றது. நமது பாடகற்குழுவில் சுமார் 40 அங்கத்தினர்கள் சிறப்பாக ஆண்டவரைப் பாடி அவருடைய நாமத்தை பிரஸ்தாபப் படுத்தி வருகின்றார்கள் நமது பாடகற் குழு தலைவர் திரு. ஆசிர் நேச ஆஸ்டீன், ஆலோசகர் பெல்பின் ராஜ், செயலர் திருமதி. செல்வி ஜாண்சன் மற்றும் கணக்கர் திருமதி. ஜெபசாந்தி ஜெபர்சன் ஆகியோர் நமது சபையில் பாடகற் குழுவை நல்ல முறையில் வழிநடத்தி செல்லுகின்றார்கள்.
நமது பாடகற் குழுவின் முக்கிய நோக்கம் பாடல்கள் பாடி நமது சபையின் ஆலய ஆராதனைகளை மெருகேற்றுவது அதன் நிமித்தம் ஆண்டவர் நாமத்தை மகிமை படுத்துவது.
இவ்வாறு சீரிய பணிகளை உண்மையாய் செய்யும் நமது சபையின் பாடகற் குழு அங்கத்தினர்களை எல்லாம் வல்ல இறைவன் இயேசு ஆசீர் வதிப்பாராக ஆமேன்.