வரலாறு
பாவ இருளில் வாழ்ந்த மனுக்குலத்தை மீட்க சிலுவையில் தன் உயிரை விலைக்கிரயமாக கொடுத்த அருள் நாதர் இயேசுவின் மரணமும் அவர் உயீர்த் உலகளாவிய திருச்சபை உருவாக்கத்திற்கு வித்தானது.
இயேசுவின் மரணத்திற்கு பின்பு அவரது அன்பை இந்தியாவிற்கு சுமந்து வந்த பன்னிரு சீஷர்களில் ஒருவரான புனித தோமா மூலமாக இந்தியாவில் குறிப்பாக தென்திருவிதாங்கூாில் சுவிக்ஷே விதைகள் விதைக்கப்பட்டது .
1806-ல் வில்லியம் ெதாபியாஸ் றிங்கல் தோபே ஐயர் அவர்கள் ஜெர்மனி தேசத்தைவிட்டு மிஷனெறியாக தென் திருவிதாங்கூரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவிசேஷ பணி புரிந்தார். றிங்கல் தோபே ஐயர் தாயகம் திரும்பிய பின் 1819 – ஆம் ஆண்டு LMS மூலம் இங்கிலாந்து மிஷனறி சாா்லஸ் மீட் ஐயர் நெய்யூரை மையமாக கொண்டு ஊழியம் செய்து வந்தார்.
தேவிகோட்டில் கிறிஸ்தவம் உதயம்
தேவிகோடு என்னும் ஊா் கன்னயாகுமாி மாவட்டம் மிடாலம் கடற்கரையிலிருந்து 2.கி.மீ.க்குள் அமைந்துள்ளது 1900-களில் இவ்வூர் மக்கள் தங்கள் தேவைகளை சந்திக்க கருங்கல் மற்றும் இன்று மார்த்தாண்டம் என்று அழைக்கப்படுகிறதான தொடுவெட்டி போன்ற இடங்களுக்கு நடைபயணமாக சென்று வருவது வழக்கம். அக்காலத்தில் சாா்லஸ்மீட் ஐயர் நெய்யூரில் தங்கி கொத்தரைவிளையை மையமாகக் கொண்டு மிஷ்ெனாி ஊழியம் செய்துவந்தாா் அவருடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் உருவாக்கி சபைகளில் தேவிகோடு சபையும் ஒன்று ஆகும். தேவியோடு பிராந்தியத்தில் 1828 ம் காலங்களில் பனை ஓலைகளில் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டது. கூடவே ஒரு கல்வி நிறுவனமும் சபை வளாகத்தில்அமைக்கப்பட்டது. அப்போதைய ஆலயத்தின் அங்கத்தினர்கள் 75 பேர். கல்விக்கூடத்தில் படித்தவர்கள் 10 பேர். 1828ஆம் ஆண்டு நமது சபையின் உபதேசியாராக யோவான் என்ற அடியவா் செயல்பட்டு வந்துள்ளார்.
வட்டார சபையாக தேவிகோடு
தேவிகோடு சபைமக்கள் பறபம்பாறவிளை, மாங்குன்னுவிளை, பரப்பு, பாலூர், மிடாலக்காடு, முக்கலம்பாடு, கண்ணன்விளை, பண்டாரவிளை, பொட்டல்குழி ஆகிய ஒன்பது கிராமங்களில் இருந்ததாக 1831ல் பணியாற்றிய திரு. சார்லஸ் குளோவர் தன் திருச்சபையின் இடங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளாா். அதன் பின்பு 1858 ஆம் ஆண்டு தேவிகோட்டின் திருப்பண்ணியாளராக திரு. வேதமாணிக்கம் அவர்கள் இறைபணியாற்றியுள்ளார்கள். அதன் பின்பு 1864 களில் திருப்பணியாளராக திரு. செபாஸ்டியான் அவர்கள் பணியாற்றி உள்ளார். நமது தேவிகோடு சபையில் பணியாற்றிய அதே நாட்களில் கூடுதலாக இறுப்புவிளாகம் சபையின் ஊழியராகவும் பணியாற்றி உள்ளார்.
ஐசக் ஹென்றி ஹாக்கர்
மீண்டும் தேவிகோடு திருச்சபையின் இரண்டாவது மிஷ்னரியாக 1893 ம் ஆண்டு சபைகளைக் கட்டும் வீரர் ஐசக் ஹென்றி ஹாக்கர் வருகை தந்தார். அவரால் எழுப்பட்ட ஆலயத்தில் I.H.H. என்ற மூன்று ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதன் பொருள் என்பதாகும் அனைத்து வீடுகளிலும் சென்று ஜெபித்து தயாள குணத்துடன் உதவி புரிந்து தேவிகோடு மக்களின் அன்பை சம்பாதித்துக் கொண்டார். விரிவு படுத்தப்பட்ட தேவிகோடு ஆலயம் உருவாவதற்கு இவர்தான் காரண கர்த்தாவதற்கு இருந்தார் இவரது அயராத முயற்சியினால் பல்வேறு குடும்பங்ளின் ஒத்துழைப்புடன் வலுவான தேவகோடு திருச்சபை உருவானது.
மிஷன் வீடு
ஐசக் ஹென்றி ஹாக்கருக்குப் பின்னால் மீண்டும் மூன்றாவது மிஷனரியாக ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து சிங்களேயர் ஐயர் 1929 -ம் ஆண்டு தேவிகோட்டிற்கு வந்து தேவனுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார். போக்குவத்து வசதிகள் போதுமான அளவில் இல்லாத அந்த காலத்தில் மிஷனரிகள் தங்கி ஊழியம் செய்வதற்கு மிஷன் வீடு ஒன்று இல்லாதிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் 1929 ம் ஆண்டில் சிங்களேயர் ஐயர் இறைப்பணியாற்றிய காலத்தில் மிஷன் வீடு கட்டப்பட்டது. இவ்வாறாக ஆசை வார்த்தைக்கு அடிபணிந்த ஆங்கில மிஷனெரிகளால் அன்று அஸ்திவாரம் இடப்பட்ட தேவிகோடு திருச்சபை இன்று ஆலமரம்போல் தழைத்தோங்கி வளர்ந்து, பரந்து, விரிந்து காணப்படுகிறது.
பாஸ்ட்ரேட் சபை
இவ்விதம் மிக வேகமாக வளர்ச்சியை கண்ட தேவிகோடு திருச்சபை நெய்யூர் சேகரத்தின் கீழ் ஒரு சர்க்கிள் சபையாக இயங்கியது. தேவிகோடு சர்க்கிள் சபையின் கீழ் பாலூர், கண்ணன்விளை, வண்ணான் விளை, கடமாங்குழி, பாராக்கன்விளை, குஞ்சாகோடு, அம்சி, முக்காடு, பூட்டேற்றி ஆகிய சபைகள் செயல்பட்டு வந்தன. அதோடு சபையில் பல விரிவாக்கப்பணிகளும், முன்னேற்ற பணிகளும் நடந்தேறின. தென்னிந்திய திருச்சபை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1961 ம் ஆண்டு தேவிகோடு திருச்சபை பாஸ்ட்ரேட் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டது.
ஆலய கோபுரம்
1957 ம் ஆண்டு தானியேல் ஐயர் அவர்கள் ஊழியம் செய்து வந்த காலத்தில் சபை மக்களின் ஒத்துழைப்போடு ஆலய கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அதில் வைப்பதற்குரிய நாக்கு மணியை Dr. மத்தியாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் நன்கொடையாக வழங்கினார்கள். கண்ணவிளை ராஜமணி அவர்கள் ஆலயம் முழுமைக்கும் மின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பின்னர் சபையின் திருந்திய மின் இணைப்பு வசதிகளை கூடல்விளை றசாலம் அவர்கள் சீரமைத்துக்கொடுத்தார்கள். 1961 ம் ஆண்டு Dr ஜெயகர் அன்பளிப்பின் மூலம் ஆலய சுற்றுசுவர் கட்டப்பட்டது.
பள்ளிக்கூடம்
1918 ஆம் ஆண்டு ஆலயத்தின் அருகாமையில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள் பலர் இப்பள்ளியில் பயின்று அறிவு ஒளி பெற்றனர். இதில் முதன்முதலாக கோட்டவிளை சாமுவேல் அவர்களும், பின்னர் குற்றிபாறவிளை நட்சத்திரம், கண்ணன்விளை ஆல்பிரட் அவர்களும் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். ஆரம்பத்தில் நமது திருச்சபை கடுப்பாட்டில் இயங்கிவந்த இந்த ஆரம்ப பாடசாலை பின்னர் அரசு கட்டுப்பட்டுக்கு கைமாறியது. இப்போது இடம் ெபயா்ந்த அப்பள்ளியானது. ஒரு நடுநிலைப்பள்ளியாக காட்சிதருகிறது.
குழந்தைகள் காப்பகம்
1971 ஆம் ஆண்டு தேவிகோடு வட்டார ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் ஆலய வளாகத்தினுள் செயல்பட்டுவந்த குழந்தைகள் காப்பகமானது 1988 ஆம் ஆண்டு முதல் ஆலயத்துக்கு சொந்தமான மிஷன் பூமியில் கட்டப்பட்டுள்ள அழகிய கட்டிடங்களில் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் இவ்வட்டார ஏழை எளிய மக்கள் ஏராளம்பேர் பயனடைந்தனர்.
சேகரசபை
தேவிகோடு பாஸ்ட்ரேட் சபையானது 1978 ஆம் ஆண்டு ஆதனீத்திற்குட்பட்ட சேகர சபையாக மாறிற்று. தேவிகோடு சேகர சபை கட்டுப்பாட்டில் பாரக்கன்விளை, தெருவுக்கடை பாஸ்டிரேட் சபைகளும், பூட்டேற்றி, எபனேசர்புரம், கூடல்விளை, விசுவாசநகர் கிளை சபைகளும், சீயோன்பாறை, தொழச்சல் எச்.எம்.எஸ். சபைகளும் செயல்பட்டு வருகின்றன. 1993 ஆம் ஆண்டு 40000 ருபாய் செலவில் 6KV சக்தியுள்ள ஜனரேட்டர் ஒன்று வாங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு 25000 ருபாய் செலவில் ஆலய வளாகத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு 42000 ருபாய் செலவில் ஒரு எலக்ட்ராணிக் ஆர்கன் ஒன்று வாங்கப்பட்டது.
ஆயர் இல்லங்கள்
1996ம் ஆண்டு ஆலய வளர்ச்சியில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. சுமார் 700000 ருபாய் செலவில் இரண்டு ஆயர் இல்லங்கள் நல்லமுறையில் கட்டி முடிக்கப்பட்டது. போதகர்கள், சபைமக்கள் ஆகியோரின் ஊக்கமான ஜெபத்தினாலும், சபைக்குழுவின் அயராத உழைப்பினாலும் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணியானது 1996 ம் ஆண்டு நிறைவு பெற்றது.
நற்செய்திப்பணி
மலைநாட்டு மிஷனறிப் பணியிலும் நமது சபை முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆத்திப்பாடி பணித்தளத்தில் Dr மோரிஸ் அவர்களைக்கொண்டு ’Dr மத்தியாஸ் ஞாபகார்த்த தேவாலயம்’ என்ற பெயரில் ருபாய் 125000 செலவில் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு கல்வராயன் மலை தேக்கம்பட்டு பணித்தளத்திற்கு மீண்டும் ஒரு ஊழியர் நமது சபை சார்பில் பிரதிஷ்டை செய்து அனுப்ப பட்டுள்ளார். அதோடு ஆண்டுதோறும் நறசெய்திப் பெருவிழா நடத்த ஆண்டவர் அனுக்கிரகம் செய்து வருகிறார். மோகன் சி. லாசரஸ், அப்பாதுரை, டென்சிங் டேனியல், ஆனந்த ஸ்திரா, பத்மா முதலியார், கிப்சன் டேனியல், சாது கிளைட்டன் போனற முன்னணி நற்செய்தியாளர்கள் தேவசெய்தியளித்துள்ளனர்.
சமூகப்பணி
1995 ம் ஆண்டு நமது சபை வாலிபர் சங்கத்தைக்கொண்டு 30000ருபாய் செலவில் உடலில் ஊனமுற்ற பொட்டகுழி பிரான்சிஸ் என்ற ஏழை குடும்பத்திற்கு வீடுகட்டி தரப்பட்டது. மேலும் 1995 ஆம் ஆண்டு முதல் நலிவடைந்த மக்களுக்காக பென்சன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் 7 பேர் உதவி பெற்று வருகின்றனர். எழுச்சி மிக்க குடும்பங்கள் 750க்கும் அதிகமாக உள்ள இத்திருச்சபை எதையும் சிறப்பாய் செய்து முடிக்கும் செயல்திறன் மிக்கது. ஆண்டுதோறும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் விதத்தில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
புதிய ஆலயம்
தேவிகோடு திருச்சபை மக்களின் மனதில்தான் எத்தனை உற்சாகம் எத்னை பரவசம், ஆண்டவர்மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். பழைய ஆலயத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் ஆலயத்தை இடித்துக்கட்ட அனைவரும் ஒரு மனதுடன் முடிவு செய்தபோது இது எப்படி ஆகும் என்ற எண்ணம் எல்லார் மனதையும் ஆட்கொண்டது. எதையுமே ஒரு சவாலாக ஏற்கும் தேவிகோடு திருச்சபை மக்கள் ஆலய பணியையும் ஒரு சவாலாக ஏற்று காணிக்கைகள் மூலம் ஆறே ஆண்டுகளில் 4000000 ருபாய் மதிப்புள்ள புதிய ஆலயத்தை கட்டி முடித்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இப்பணிக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்த சபைக்கமிற்றியை நாம் என்றும் மறக்க முடியாது.
சமூக நலக்கூடம் மற்றும் கலையரங்கம்
திருச்சபை மற்றும் சமுதாய மக்களின் நீண்டநாள் கனவாகிய சமூக நலக்கூடமானது 3.2.2008 அன்று Rt. Rev. தேவகடாட்சம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 21.06.2015 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நமது பேராயர் Rt. Rev. தேவகடாட்சம் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது.
திருச்சபையின் சிறப்பு நிகழ்வுகளை ஆலய வளாகத்தில் நடத்துவதற்கான சிரமங்களை கருத்தில் கொண்டு நமது சபையின் அங்கத்தினரான திரு. எஸ். வில்பிரட் ஜாண் அவர்கள் முயற்சியில் சவுதி தமிழ் சங்கம் இணைந்து சுமார் 700000 செலவில் அழகிய ஒரு Rev.மீட் நினைவு கலையரங்கம் ஒன்று அமைத்து தந்தனர். அந்த கலையரங்கத்தை நமது சேகரத்துப்போதகர் Rev. Y.டேவிட் குணமணி அவர்களால் 25.12.2016 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. இவ்வாறாக நமது சபை இந்த பிராந்தியத்தில் இறைபணி செய்வதோடு நிறுத்திவிடாமல் சமூக சேவையும் செய்து உண்மையான கிறிஸ்தவத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியம் மிக்க திருச்சபையாக திகழ்கிறது.
Reference
Agur C.M., (1903), “Church history of Travancore”, SPS press, Madras, Vepery, pp-816.