எபனேசர்புரம்

எபனேசர்புரம் C.S.I சபை வரலாறு

எனேசர்புரம் C.S.I திருச்சபையானது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் கீழ்குளம் கிராமம் கீழ்குளம் பேரூராட்சியில் வளம் கொழிக்கும் செந்தறை என்கின்ற அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. இவ்வூர் மக்கள் இறைவனைப் பற்றிய ஆன்மீக தாகத்தால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பாரக்கன்விளை CSI ஆலயத்தில் உறுப்பினராக சேர்ந்து கடவுளை துதித்து வந்தார்கள். சென்று வருவதர்க்கு தூரம் அதிகமானதால் செந்தறை கூழச்சன்விளையில் திருவேத நாயகம் அவர்கள் இல்லத்தில் கூடி தொழுகை நடத்தினார்கள். சபை கூடிவருதலை விரும்பி மக்கள் இறைவனை தொழ தனியாக ஆலயம் வேண்டும் என்று விரும்புவதை அறிந்த தேவ ஊழியர் திரு சுந்தர் சாம் சிசில் அவர்கள் Rev.விக்டர் அவர்களோடு இணைந்து திரு G சார்லஸ் அவர்களின் பெயரில் விண்ணப்பித்து பேராயரிடம் இருந்து கூழச்சன்விளை என்ற பெயரில் ஆலயம் கட்ட அனுமதி பெறப்பட்டது.<அர்ப்பணித்த குடும்பங்கள் ஆதிச்சன் என்ற அருமை நாயகம் நாடார் அவர்கள் மக்கள் திரு.ஞானசிகாமணி நாடார் மற்றும் அப்பாவு நாடார் குருபாதம் நாடார் மகன் திரு ஜான்சன் நாடார் வேலாயுதம் என்ற வேதநாயகம் நாடார் மக்கள் திரு.V.பிறைட் மற்றும் திரு.V.சோபனம் ஆகியோர் 12.5 சென்ட் நிலத்தைமுஞ்சிறை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1970ம் வருடம் 1737ம் நம்பர் பத்திரப்படி ஆதார நாள்4 -7 – 1970 அன்று சுதேசமிஷனெ ரி சங்கத்திர்க்கு தானமாக வழங்கினார்கள். ஓலை கூறைவேய்ந்த ஆலயம் 1970ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் நாள் பேராயர் பேரருட்திரு I.R.Hஞானதாசன் அவர்களால் சுதேசமிஷனெறி சங்கம் (HMS) பிரதிஷ்டைசெய்யப்பட்டது. முதல் ஊழியராக திருமிகு S சுந்தர் சாம் சிசில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்ற அறை கூவல்

புதிய ஆலயம் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சபைமக்களின் வாஞ்சையை நிறைவுசெய்யும் பொருட்டு சபைபோதகர் Eva R. செல்வராஜ் தலைமையில் 16-5- 2010 அன்று சபைகமட்டி நடைபெற்றது. அதில் புதிய ஆலயம் கட்டுமான பணி மற்றும் ஆலய கோபுரம் புதிய ஆலயத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்தல் குறித்த சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 6.6.2010 அன்று பொது சபை கூட்டப்பட்டு திரு V சோபனம் அவர்களை கன்வீனராக தேர்ந்து எடுக்க பட்டது. கட்டுமான குழுவில் G .ஜார்ஜ் திருதங்கையா, ஆசிரியர் திரு ஸ்டான்லி கிறிஸ் பின் திரு N சரேஷ், திரு சிசில், திரு L. அம்புறோஸ், Er.R.ராஜேஸ், திருமதி மேபல் லதா, திரு பெஸ்லி தாமஸ், திரு V.லெஸ்லி ஆகியோரை கொண்ட குழு செயல்பட்டது. 28-11- 2010 அன்று குமரி பேராயர் Rt.Rev.Dr.G.தேவகடாட்சம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆலய வேலை துவங்கப்பட்டது. அழகிய அமைப்புடன் கட்டப்பட்ட கோபுரத்துடன் கூடிய புதிய ஆலயம் 19-10-014 அன்று குமரி பேராயர் Rt.Rev.Dr.G.தேவகடாட்சம் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டு தர்போது ஒரு எடுத்துகாட்டின் சிகரமாக எபனேசர்புரம் திருச்சபை இறைபணியில் சிறந்து விளங்குகிறது.