
விசுவாச நகர் திருச்சபையானது முதன் முதலில் கல்லிடுக்கு பகுதியின் பாறையில் திருமதி.நேசம்மாள் பாலையா, திருமதி ஜெசம்மாள் தங்கையா ஆகிய இரு தாய்மார்களும் சாயங்கால வேளையில் போய் ஜெபித்ததின் விளைவாக அவர்கள் ஊன்றிய விதையானது தேவிகோடு திருச்சபையின் மூலமாக முளைவிட தொடங்கியது. பின்னர் தேவிகோடு திருச்சபையின் போதகராக பணியாற்றிய Rev.D.இரத்தினராஜ் அவர்கள் தலைமையில் கூடி ஆலோசித்து கல்லிடுக்கு பகுதியில் நற்செய்தி பணி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லிடுக்குப் பகுதிகளில் உள்ள வீடுகளை சந்தித்து ஜெபித்து பிள்ளைகளை அழைத்து வந்து கல்லிடுக்கில் உள்ள பாறையில் அமர்ந்து வேதம் கற்று கொடுக்கப்பட்டது. பின்னர் அது ஓய்வு நாள் பாடசாலையாக வளர்ந்தது; கற்பாறையில் வைத்து ஆராதனையும் நடத்தப்பட்டது. பின்னர் தேவிகோடு திருச்சபையின் மலை நாட்டு ஜெபக் குழு சார்பில் சில வாரங்கள் ஞாயிறு மாலையில் கல்லிடுக்கு பகுதியில் வீடுகளை சந்தித்து ஜெபித்து வந்தனர். இதில் தேவிகோடு திருச்சபையின் வாலிப சகோதர சகோதரிகளும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஓய்வு நாள் பணியினை பொறுப்பேற்று நடத்தியவர்கள்: தேவிகோடு திருச்சபையின் போதகர் அருட்திரு இரத்தினராஜ் தலைமையில் திரு.இரத்தினராஜ் ஆசிரியர், திரு.எட்வின் ஆசிரியர், திரு.பிறைட்சிங் ஆசிரியர், திரு.சாமுவேல் ஜெயராஜ், திரு.சுந்தர்ராஜ், திருமதி.ஜெசம்மாள் தங்கையா, திருமதி.நேசம்மாள் பாலை, திருமதி.ஆபரணம் நெல்லி பாய், திருமதி.அரணம்மாள் அம்பையா இன்னும் அநேகர் ஆவார்.
ஓய்வு நாள் பாடசாலை நடந்து கொண்டிருக்கும் போது Rev.இரத்தின ராஜ் தலைமையில் பெரியவர்களால் அங்குள்ள வீடுகளை சந்தித்து ஜெபித்து வந்தனர். அதன் பயனாக சில தாய்மார்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊழியத்தினால் வழிகாட்டப்பட்ட கல்லிடுக்கு மக்கள் தங்கள் நிலத்தை ஆலயத்திற்காக அர்ப்பணித்தனர்.
Dr.வில்லியம் அவர்களிடம் திருச்சபை கட்டுமான பணி பொருளாதார செலவை பெற்று கொண்டதால் அன்னாரின் தந்தை Dr.செல்லக்கண் நினைவாக Dr.செல்லக்கண் நினைவு ஆலயம் என்று சபை இருக்கும் இடத்தின் பெயர் சூட்டப்பட்டது. Dr.செல்லகண் அவர்கள் தந்தை திரு.விசுவாசம் அவர்களின் பெயர் வர கூடிய வகையிலும் இறைவனின் பெயரில் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் இந்த திருச்சபையை கட்டி எழுப்பியதாலும் இந்த ஆலயத்திற்கு விசுவாசபுரம் என்று பெயர் சூட்டப்பட்டது.
முதல் திருப்பணியாளராக சேகர செயர்குழுவின் தீர்மானத்தின் படி கடமாங்குழி திருச்சபையை சார்ந்த திரு.இரத்தின மணி அவர்களை முதல் திருப்பணியாளராக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (Refer District Working Committee minute). பின்னர் திரு.இரத்தின மணி அவர்கள் H.M.S.ன் முதன் இறைப்பணியாளராக பொறுப்பேற்று செயல்பட்டார்.
விசுவாசபுரம் முதல் தேவாலய பிரதிஸ்டை 21/10/1980ல் நடைபெற வேண்டும் என்றும் அன்று நமது பேராயரை அழைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி, 21/10/1980 ஆம் நாள் Dr.செல்லகண் நினைவு ஆலயம் பேராயர் Rt.Rev.G.கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஸ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் 73 பேர் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டார்கள். திருச்சபை H.M.S.ன் கீழ் கன்னியாகுமரி பேராயத்தில் ஒரு திருச்சபையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனில் அந்த திருச்சபையில் இருந்து வரும் வருமானம் அங்கு நியமிக்கப்படும் திருப்பணியாளரின் ஊதியத்திற்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் Dr.செல்லகண் நினைவு திருச்சபை புதிய திருச்சபை அதனால் பொருளாதார வசதியில் குறைவுபட்டிருந்தமையாலும் அதனை H.M.S.ன் கீழ் கொடுக்க ஆலோசித்து 22.07.1979ல் H.M.S.ன் கீழ் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து H.M.S சபையாக செயல்பட்டது. அன்றைய முதல் நாள் விசுவாசபுர திருச்சபையின் மொத்த காணிக்கை வரவு 0.39 காசுகள். சபையின் முதல் இறைப்பணியாளர் திரு.இரத்தின மணி அவர்கள்.
H.M.S.ன் கீழ் பணியாற்றியவர்கள்: 1. Mr.இரத்தினமணி 2. Mr.வேதராஜ் 3. Mr.இராஜையா 4. Mr.தனசிங் 5. Mr.பெர்ஜஸ் 6. Mr.கணேசன் 7. Mr.ஜாண்சைலம் 8. Mr.ஜேக்கப் 9. Mr.லாலஸ். திரு.லாலஸ் H.M.S.ன் கடைசி இறைப்பணியாளராவார். விசுவாசபுரம் திருச்சபை தோவாளை பகுதியில் இன்னொரு CSI திருச்சபை விசுவாசபுரம் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததால் நம்முடைய திருச்சபைக்கு அப்போதைய பேராயர் Ret.Rev.கிறிஸ்துதாஸ் அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, H.M.S.ல் திருச்சபையில் பணியாற்றிய போதகரே CSI-லும் முதல் இறைப்பணியாளராக பேராயம் அங்கீகரித்தது. 17/04/1996 அன்று குமரி பேராயத்துடன் விசுவாச நகர் திருச்சபை சேர்த்துக்கொள்ளப்பட்டது. அன்று முதல் CSI விசுவாச நகர் திருச்சபையாக இலங்கி சுடர் விட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. CSI-ல் பணியாற்றிய இறைப்பணியாளர்கள்: 1. லாலஸ் 2. திரு.றசல்ராஜ் 3. Rev.டொனால்டு சாமுவேல் 4. திரு.பால் ஜார்ஜ் 5. சாதுசெல்வன் 6. திரு.ஜாண் ஜேக்கப் 7. திரு.PM.இராஜையன் 8. திரு.றசல்ராஜ் 9. திரு.கிறிஸ்டல்நேசராஜ் 10. திரு.ஆல்வின் டேவிட்ராஜ். இவர்களில் திரு.ஆல்வின் டேவிட்ராஜ் தற்போதைய இறைப்பணியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
திரு.ஜாண் ஜேக்கப் இறைப்பணியாளராக பணியாற்றிய போது 2002ம் வருடம் தற்போதைய அழகிய ஆலயம் கட்டுவதற்காக 10.9.2001ல் தற்போதைய இந்த 20 சென்ட் மனையை கிரயமாக பெற்றோம். அதன்பின் திரு.ஜான் ஜேக்கப் அவர்கள் ஓய்வுபெற்றதை தொடர்ந்து 2002ல் பொறுப்பேற்ற Eva.PM.இராஜையன் அவர்களின் உழைப்பாலும் சபை மக்களின் உற்சாக தூண்டுதலினாலும் மிஷன் வீடு கட்டும் சிந்தனையில் ஈடுபட்ட போது மிஷன் வீடு அல்ல ஆண்டவருக்கு மகிமையாக ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தவர் Eva.PM.இராஜையா அவர்கள் தான். அத்துடன் 2004 ஆம் ஆண்டின் நற்செய்தி பெருவிழாவை இந்த இடத்தில் திறந்த வெளியில் நடத்தினோம். அதன் நிறைவு நாள் கூட்டத்தில் இந்த இடத்தில் தான் ஆண்டவரை நாம் தொழுது கொள்ளும் ஆலயம் எழும்பும் என அறிவித்தார். பின்னர் நிதி சேகரித்ததுடன் கேரளப் பாடியும் வெளி இடங்களில் பாடியும் நிதி சேகரித்தனர். Eva.PM.இராஜையன் 5 ஆண்டு பணியாற்றி இடமாற்றம் பெற்று சென்றதைத் தொடர்ந்து Eva.றசல்ராஜ் அவர்களின் இறைபணி காலத்தில் கடவுளின் கிருபையால் பேராயர் Rt.Rev.தேவகடாட்சம் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திரு.கிறிஸ்டல்நேசராஜ் இறைப்பணியாளர் அவர்களின் அயராத உழைப்பும் ஜெபத்தாலும் கட்டும் பணி வேகமாக நடைபெற்றது. விசுவாச நகர் ஆலயமானது 27.01.2013 ஆம் நாள் குமரி பேராயராகிய Rt.Rev.G.தேவகடாட்சம் MA.BD.M.TH அவர்களால் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
திருச்சபையின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை பணியாற்றிய மூப்பர்கள்: 1.திரு.ரத்தினராஜ் 2.திருமதி.ஜெசம்மாள் தங்கையா 3.திருமதி.நேசம்மாள் பாலையா 4.திரு.நெல்சன் 5.திரு.டேவிட் 6.திரு.ஜெயானந்தாஸ் 7.திரு.குமாரதாஸ் 8.திரு.ஜெயராஜ் 9.திருமதி.லீலா பாய் 10.திருமதி.வஸ்திபாய் 11.திரு.ஜான்சன் 12.திருமதி.சரோஜினி பாய் 13.திரு.வின்சென்ட் 14.திரு.தாசன் 15.திருமதி.உஷாபிறைட் 16.திரு.ஸ்டீபன் 17.திருமதி.சுகந்தி 18.திருமதி.சுதா 19.திரு.சுந்தர் சிங் 20.திரு.சதீஸ்குமார் 21.திரு.P.டைட்டஸ். இதுவரை உள்ள விசுவாச நகர் திருச்சபையின் செயலர்கள்: 1.திரு.இரத்தின ராஜ் 2.திரு.ஜெயராஜ். சபை கணக்கர்கள்: 1.திருமதி.ஜெசம்மாள் தங்கையா 2.திரு.நெல்சன் 3.திருமதி.உஷாபிறைட். சபை பொருளாளர்கள்: 1.திருமதி.நேசம்மாள் பாலையா 2.டேவிட் 3.திருமதி.வஸ்திபாய் 4.திரு.ஜான்சன் 5.திருமதி.சரோஜினி பாய். பேராய மாமன்ற உறுப்பினர்கள்: 1.திரு.R.ஜெயராஜ் 2.திருமதி.உஷா பிறைட். கட்டிட குழு பொறுப்பாளர்கள்: திரு.சுந்தர் சிங், திருமதி.சேரோஜினிபாய். திருச்சபையில் இருந்து சேகர பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: திரு.சுந்தர் சிங் (ஓய்வு நாள் பள்ளி சேகர செயலர் மற்றும் தேவிகோடு சேகர செயலர்), திருமதி.உஷா பிறைட் (பெண்கள் ஐக்கிய சங்க சேகர செயலர்). திருச்சபையில் பணியாற்றிய வேதாகம தாய் திருமதி.ஜெயின் பாய் அவர்கள் தம்முடைய வாழ்நாளில் பெரும் பகுதியை திருச்சபையின் ஊழியத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.
இதுவரை பணியாற்றிய கோயில் பிள்ளைகள்: திரு.வின்சென்ட், திரு.ஸ்டாலின், திரு.முருகேசன், திரு.லெலின் ஜோஸ், திரு.சஜின், திரு.அஜின், திருமதி.ஜெபாபிராகிரன்ஸ். ஆரம்ப கட்ட விசுவாச நகர் திருச்சபையில் திரு.வேதராஜ் சபை திருப்பணியாளராக பணியாற்றிய போது அவர்கள் கிறிஸ்துவுக்காக ஆத்தும ஆதாயம் செய்ய தன்னை முழுவீச்சில் பயன்படுத்தினதின் காரணமாக இன்று விசுவாச நகர் திருச்சபையானது 106 குடும்பத்தினருடன் குன்றின்மேலிட்ட விளக்காக எழும்பி பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.