நமது சபையின் பெண்கள் ஐக்கிய சங்கமானது சீரும், சிறப்புமாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 3.30 மணியளவில் தொடங்கி 5 மணிவரை நடைபெறுகின்றது. சுமார் 60 பெண்கள் கலந்து கொண்டு ஆண்டவராகிய இயேசுவின் இராஜ்ஜியத்தை கட்டி வருகின்றார்கள். திருச்சபை வளர்ச்சிக்காக, திருச்சபையின் குடும்பங்களுக்காக, தேசத்துக்காக, மிஷ்னெறி பணிகளுக்காக, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதே நமது திருச்சபையின் பெண்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம்.